×

மூதாட்டியிடம் மண்டியிட்ட கொரோனா: தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 96 வயது மூதாட்டி குணமடைந்தார்...அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்

டியாகு: சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கொரேனா வைரஸ் உலகம் முழுவதும் கோராத்தாண்டம் ஆடி வருகிறது. தற்போது வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த மருத்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் நடுங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர்.  

இதற்கிடையே, தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 96 வயது மூதாட்டி ஹூவாங் என்பவர் குணமடைந்துள்ளார் என அந்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அந்த நாட்டின் தெற்கு பகுதியைச் சேர்ந்த டியாகு நகரைச்சேர்ந்த அந்த மூதாட்டி, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, தற்போது குணமடைந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தலில் இருந்து  வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகமாக உயிரிழக்கிறார்கள் அந்த வகையில் தென்கொரியாவில் வெறும் 18% சதவிகிதம் மட்டுமே முதியவர்கள் உள்ளனர். அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென் கொரியா 53-வது இடத்தில் உள்ளது இதுவும் வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைய பெரும் காரணமாக உள்ளது.

தன்னார்வ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகலாக வேலை செய்து பிற நோயாளியின் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். தென்கொரியாவில் செய்யப்படும் வைரஸ் சோதனைகளே வைரஸ் கட்டுப்பாட்டுக்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. தற்போது பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா, மருத்துவ உபகரணங்களுக்காக தென்கொரியாவிடம் உதவி கரம் நீட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Grandpa ,South Korea ,Corona , Corona kneeling to the grandmother: A 96-year-old grandmother who suffered from coronavirus in South Korea has healed ...
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!